உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெற் பயிரில் மஞ்சள் நோய்

நெற் பயிரில் மஞ்சள் நோய்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பகுதியில் நெற்பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பகுதிகளில், தாளடி பட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.தற்போது, கோடை வெயில் அதிகமாக இருப்பதால் நெற் பயிரில் மஞ்சள் பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. கதிர் வரும் நேரத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வேளாண் உதவி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் அந்த பகுதி நிலத்தில் பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள். ஆனால் தற்போது வேளாண் உதவி அலவலர்கள் சரியாக வருவதில்லை.இதனால் நோய் தாக்குதலை கட்டுபடுத்த தனியார் கடைகளில் வியாபாரிகள் வழங்கும் மருந்தை வாங்கி விவசாயிகள் தெளித்தும் நோய் சரியாகவில்லை. உடனடியாக வேளாண் விஞ்ஞானிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி