உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூரில் ரேஷன் அரிசி கடத்தல் வாலிபர் கைது; இருவருக்கு வலை

வேப்பூரில் ரேஷன் அரிசி கடத்தல் வாலிபர் கைது; இருவருக்கு வலை

கடலுார் : வேப்பூரில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார் வேப்பூர் மெயின்ரோட்டில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினிடெம்போவை நிறுத்துமாறு கூறினர்.டெம்போ நிற்காமல் வேகமாக சென்றதால் சந்தேகமடைந்த போலீசார் துரத்திச் சென்று பிடித்தனர்.டெம்போவில் இருந்த மூன்று பேரில் இருவர் தப்பினர். ஒருவர் மட்டுமே பிடிபட்டவர். டெம்போவில் 50 கிலோ வீதம் 34 மூட்டைகளில் இருந்து 1,700 கிலோ ரேஷன் அரிசி இருப்பதுதெரிந்தது.விசாரணையில், பிடிபட்டவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருந்தலகுறிச்சியைச் சேர்ந்த சின்னசாமி மகன் மணிகண்டன்,26; என்பது தெரிந்தது. இவரும் தப்பியோடிய விருத்தாசலம், நல்லுாரைச் சேர்ந்த குகன், வெங்கடேசன் ஆகியோரும் தொரவலுார், நல்லுார் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்து விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு தலைவாசல் கோழிப் பண்ணைக்கு விற்க கடத்தி வந்ததும் தெரிந்தது.உடன், போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து, டெம்போவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பிடியோடிய இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை