உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீசை மிரட்டிய வாலிபர் கைது 

போலீசை மிரட்டிய வாலிபர் கைது 

புவனகிரி: புவனகிரியில் போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.புவனகிரி கவரப்பாளையம் தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர். இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரை சேர்ந்த அருண்குமார், 35; என்பவர், போதையில் பொருட்கள் கேட்டு, அப்துல்காதரிடம் தகராறு செய்தார். இதை, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட புவனகிரி போலீஸ்காரர், தட்டிகேட்டுள்ளார். அப்போது போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்து, அருண்குமார் மிரட்டியுள்ளார்.இதுகுறித்த புகாரின்பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து அருண்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி