உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

சிதம்பரம் : சிதம்பரம் அருகே சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.சிதம்பரம் அருகே எண்ணாநகரம் மேலத்தெரு கரைமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் சக்தி கணேஷ்,19; சென்னையில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, துாங்கிங்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.இதுகுறித்து சிறுமியின் தாய், சிதம்பரம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வாலிபர் சக்திகணேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ