உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவிக்கு தொல்லை போக்சோ வில் வாலிபர் கைது

மாணவிக்கு தொல்லை போக்சோ வில் வாலிபர் கைது

கடலுார் : கடலுார் அடுத்த பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகன் தமிழ்வாணன்,26; தொழிலாளி. இவர், 17 வயது பிளஸ் 2 மாணவி பள்ளிக்கு செல்லும் போது, பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை அளித்தார். இதற்கிடையே, பள்ளி முடிந்து தந்தையுடன் வீடு திரும்பி சிறுமியை தமிழ்வாணன் வழிமறித்து கையை பிடித்து இழுத்தார். தடுக்க வந்த சிறுமியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து தமிழ்வாணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி