உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

குள்ளஞ்சாவடி : மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள ரைஸ்மில் ஒன்றின் பின்புறம் மதுபாட்டில் விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது. மதுபாட்டில் விற்ற குள்ளஞ்சாவடி, இருசப்ப நகர் பாலசுப்ரமணியன், 55, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.விருத்தாசலம்: ஆலடி சப் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி, 55, என்பவர் டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, கொளஞ்சியை கைது செய்தனர். 6 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ