உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்பனை 3 பேர் கைது

கஞ்சா விற்பனை 3 பேர் கைது

புவனகிரி : புவனகிரி அருகே கஞ்சா விற்பனை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலக்கீரப் பாளையம் நல்லத்தண்ணீர் குளம் அருகே நின்றிருந்த மூன்று வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், புவனகிரி அருகே திருப்பணிநத்தத்தை சேர்ந்த அஜித்குமார், 27; கீழ்கீரப்பாளையம் மெயின்ரோடு சுபாஷ், 23; கீரப்பாளையம் கண்ணன் கோவில் தெரு மதன், 23; எனத் தெரிய வந்தது.மேலும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, 3 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை