உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரியில் குரங்கு கடித்து 3 பெண்கள் காயம்

புவனகிரியில் குரங்கு கடித்து 3 பெண்கள் காயம்

புவனகிரி: புவனகிரியில் குரங்கு கடித்து மூன்று பெண்கள் காயமடைந்தனர்.புவனகிரி, சித்தேரி ரோடு தாமரைக்குளம் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதும், சாலையில் நடந்து செல்வோரை துரத்திச் சென்று கடிக்கின்றன.குரங்குகளைப் பிடித்து காப்புக் காட்டில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ள வில்லை.இந்நிலையில் நேற்று அப்பகுதில் அருந்ததியர் தெருவை சேர்ந்த சேகர் மனைவி செல்வி, 55; ராமலிங்கம் மனைவி செல்வகுமாரி, 45; சஞ்சாயி, 35; ஆகிய 3 பேரை குரங்கு கடித்தது. இதில் காயமடைந்த மூவரும் புவனகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கிராமத்தில் சுற்றித் திரியும் குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி