மேலும் செய்திகள்
குட்கா விற்பனை பெண் மீது வழக்கு
23-Sep-2024
விருத்தாசலம், : நிலத்தகராறில் பைக்கில் வந்தவரை காரால் மோதி, கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.விருத்தாசலம் அடுத்த பரவளூரை சேர்ந்தவர்கள் ஜெயசங்கர், 48. தேவேந்திரன். இருவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது. கடந்த 29ம் தேதி பைக்கில் ஜெயசங்கர் வந்தபோது, எதிரே காரில் வந்த தேவந்திரன் அவர் மீது மோதினார். கீழே விழுந்த ஜெயசங்கரை கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். அதில் காயமடைந்த ஜெயசங்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், தேவேந்திரன் மீது விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Sep-2024