| ADDED : நவ 21, 2025 05:33 AM
குறிஞ்சிப்பாடி: நேரடி நெல் விதைப்பு செயல் விளக்க திடல்களை , வேளாண் துணை இயக்குனர் ஆய்வு செய்தார். தேசிய உணவு பாதுகாப்பு மற்றும், ஊட்டச்சத்து இயக்கம் திட்டத்தின் கீழ், குறிஞ்சிப்பாடி வட்டா ரத்தில் நடப்பு ஆண்டின் சம்பா பருவத்தில், நேரடி நெல் விதைப்பு செயல் விளக்க திடல் அமைத்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படு கிறது. இத்திட்டத்தின் கீழ், கீழூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள, செயல் விளக்க திடல்களை வேளாண் துணை இயக்குனர் அமிர்தராஜ் ஆய்வு செய்தார். திடல் அமைக்க மானியத்தில் தொகுப்பாக வழங்கப்பட்ட விதைகள், நுண்ணுாட்ட கலவை, உயிர் மற்றும் அங்கக உரங்கள், நானோ யூரியா, இலை வண்ண அட்டை ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மலர்வண்ணன், வேளாண் அலுவலர் வேல்முருகன், உதவி வேளாண் அலுவலர் சத்யா, உதவி தொழில்நுட்ப மேலாளர் கமலநாதன், பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் சுபாஷ் மற்றும், விவசாயிகள் உடனிருந்தனர்.