உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்: கடலூரில் நாளை துவங்குகிறது

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்: கடலூரில் நாளை துவங்குகிறது

கடலுார் : ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம், கடலுாரில் நாளை (4ம் தேதி) துவங்குகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.'அக்னிபத்' திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு 2024ம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு முகாம், கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நாளை 4ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது.இதற்காக, சென்னை, கடலுார், விழுப்புரம், வேலுார் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு கடந்த பிப்ரவரி 14 மற்றும் 15ம் தேதியில் நடந்த எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை துவங்குகிறது.ஆட்சேர்ப்பு முகாமையொட்டி, அண்ணா விளையாட்டரங்கில் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வரும் 13ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் அதிக அளவிலான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.இதுகுறித்து மேலும் விபரங்கள் பெற விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி 04146 226417 எண் மூலமோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்போர் கொண்டு வர வேண்டிய சான்றிதழ் மற்றும் விபரங்கள் குறித்து www.joinindianarmy.nic.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை