உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணசாமி பள்ளி மாணவருக்கு ஓவியக்கலைஞர் விருது

கிருஷ்ணசாமி பள்ளி மாணவருக்கு ஓவியக்கலைஞர் விருது

கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு, மாவட்ட அளவில் சிறந்த ஓவியக்கலைஞர் விருது வழங்கப்பட்டது.கடலுாரில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழா கலை பண்பாட்டு பாசறை மாவட்ட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில், கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் அணுநித்திஷ் என்பவருக்கு, மாவட்ட அளவில் சிறந்த ஓவியக்கலைஞர் என்ற விருது மற்றும் ரொக்கப்பரிசை தமிழக பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லியோனி வழங்கினார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், கலெக்டர் அருண்தம்புராஜ், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் மாணவரை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி