உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதை - வேப்பூர் சாலையில் டாஸ்மாக் கடையால் ஆபத்து

விருதை - வேப்பூர் சாலையில் டாஸ்மாக் கடையால் ஆபத்து

விருத்தாசலம்: கோமங்கலம் அரசு டாஸ்மாக் கடையால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் கிராமத்தில், டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான மதுப்பிரியர்கள் வந்து செல்கின்றனர். வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறமாக மதுக்கடை இருப்பதால், சாலையை கடப்போர் தினசரி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், பரவளூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள நிலையில், மதுஅருந்தி வருவோர் போக்குவரத்து விதிமீறி பயணிக்கின்றனர். இதனால் அதிவேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.எனவே, டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியில் எச்சரிக்கை பலகை பொறுத்தி, விபத்து அபாயத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை