உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் திருடன் கைது: 10 வாகனங்கள் பறிமுதல்

பைக் திருடன் கைது: 10 வாகனங்கள் பறிமுதல்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பைக்குகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் பகுதியில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவத்தை தடுக்கும் பொருட்டு டி.எஸ்.பி., பிரபு மேற்பார்வையில், திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் கணபதி, ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று இம்பீரியல் சாலையில் ரோந்து சென்றனர்.அப்போது, மோகினி பாலம் அருகே பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், குறிஞ்சிப்பாடி அடுத்த குண்டியமல்லுார் பழனி மகன் நாகராஜ், 23; என்பதும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பைக்குகள் திருடியதும் தெரிந்தது.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, நாகராஜை கைது செய்து, அவர் திருடி வைத்திருந்த 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !