உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  புத்தாண்டையொட்டி வெடிகுண்டு சோதனை

 புத்தாண்டையொட்டி வெடிகுண்டு சோதனை

கடலுார்: கடலுார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடலுார் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனை நடத்த எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் கடலுாரில் சப் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான குழுவினர் திருப்பாதிரிப்புலியூர், கடலுார் முதுநகர் ரயில்வே நிலையங்கள், பாடலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள், கடலுார் பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் மோப்ப நாய் பீட் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், நெய்வேலி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி