உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் முன்விரோதம் காரணமாக ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் பூவன் காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார், 40; அதே பகுதியைச் சேர்ந்தவர் தொப்புலான். இவர்கள் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று காலை தொப்புலான், அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், இவரது மகன் பிரவீன் ஆகிய 3 பேரும் சிவக்குமார் வீட்டின் முன் நின்று ஆபாசமாக திட்டினர். தட்டிக்கேட்ட சிவக்குமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ