உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  முந்திரி இயந்திர  கண்காட்சி நாளை துவக்கம் 

 முந்திரி இயந்திர  கண்காட்சி நாளை துவக்கம் 

பண்ருட்டி: காடாம்புலியூரில் முந்திரி இயந்திர கண்காட்சி நாளை துவங்குகிறது. தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் முந்திரி தினவிழாவையொட்டி, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்களுக்கு, பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், ஏ.வி.மகாலில் முந்திரி இயந்திர கண்காட்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், 100 பேர், 23 நிமிடங்களில் 23 முந்திரி கொட்டைகளை கை இயந்திரம் மூலம் உடைக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10:00 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில், முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் மலர்வாசகம், பொருளாளர் செல்வமணி ஆகியோர் வரவேற்கின்றனர். சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் பணிகள் குறித்து விளக்குகிறார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், அபேடா உதவி பொதுமேலாளர் சோபனாகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இதில் வேளாண் துணை இயக்குனர் பூங்கோதை, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் விஜயகுமார், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கலியமூர்த்தி, கடலுார் சைபர் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் முந்திரி ஏற்றுமதி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை சங்க தலைவர் மலர்வாசகம், செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை