உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பெண்ணிடம் செயின் பறிப்பு

 பெண்ணிடம் செயின் பறிப்பு

கடலுார்: மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த செயினை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் அடுத்த களையூர் கிராம ஏரிக்கரையில் நேற்று முன்தினம் மாலை 5:30மணிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த அருள் மனைவி சித்ரா,49, என்பவர்;மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், சித்ராவின் கழுத்திலிருந்த தாலியை பறிக்க முயன்றார். அப்போது சித்ரா தடுத்துப்போராடினார். அதில் அவருக்கு கழுத்து, கைகளில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அந்த வாலிபர், சித்ராவின் கழுத்திலிருந்த, 5 கிராம் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார். துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து,அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ