உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கடலுார் சிறுமிக்கு முதல்வர் பாராட்டு

 கடலுார் சிறுமிக்கு முதல்வர் பாராட்டு

கடலுார்: மத்திய அரசின் கல்விக்கொள்கையை ஏற்க முடியாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், மத்திய அரசு தமிழக அரசுக்குவழங்க வேண்டிய கல்விக்கான நிதி, 2 ஆயிரம் கோடி ரூபாயை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் மத்திய அரசு நிதியை நிறுத்தினால் என்ன,நாங்கள் தருகிறோம் என கடலுாரைச் சேர்ந்த டாக்டர்கள் கலைக்கோவன் - கிருஷ்ணபிரியா தம்பதியினரின் மகளான எல்.கே.ஜி.,படிக்கும் நன்முகைஎன்ற சிறுமி, தான் சேமிப்புக்காக வைத்திருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த 10ஆயிரம் ரூபாயை தமிழக முதல்வருக்கு கல்வி நிதியாக அனுப்பினார். தொடர்ந்து தமிழக அரசு சார்பில், மத்திய அரசு தர வேண்டிய நிதியை ஈடு செய்ய, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' என்ற பெயரில் நிதியை திரட்ட திட்டம் துவங்கப்பட்டது. இதற்கான நிதி வழங்குவதில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று சமூக ஆர்வலர்கள்இயக்கமாக மாறியது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் திரட்டப்பட்ட நிதி ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி விட்டது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதுடன், கடலுார் சிறுமி நன்முகையை நினைவு படுத்தியிருந்தார். மேலும் தி.மு.க.,வின் கட்சி நாளிதழில், ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் நன்முகையின் செயலை பாராட்டியிருந்தார். அதில் கடலுார் சிறுமி நன்முகை விதைத்த விதை விருட்சமாகி ஆலமரமாக வளர்ந்துள்ளது, அனைத்து தரப்பினரும் சிறுமிக்கு பாராட்டுதலை தெரிவித்துவருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ், மா.கம்யூ.,மாநில செயலாளர் சண்முகம் உட்பட பலர் பாராட்டை தெரிவித்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை