உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே ஸ்டேஷனில் துாய்மை விழிப்புணர்வு

ரயில்வே ஸ்டேஷனில் துாய்மை விழிப்புணர்வு

விருத்தாசலம் : விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, துாய்மை பணிக்கான விழிப் புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ரயில்வே சுகாதார ஆய்வாளர் வசந்த் தலைமை தாங்கி, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை ரயில் பயணிகள் தவிர்க்க வேண்டும் என கூறினார். ரயில்வே இருப்பு பாதை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரி, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தீபக் பெப்ரிவா, சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். இதில், ரயில்வே போலீசார், துாய்மை பணியார்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பொது சுகாதாரம், பாதுகாப்பு பயணம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ரயில் பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், துாய்மை பணிக் கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை