உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நகராட்சி பள்ளிக்கு கலெக்டர் விருது

நகராட்சி பள்ளிக்கு கலெக்டர் விருது

நெல்லிக்குப்பம் : திருக்கண்டேஸ்வரம் நகராட்சி பள்ளிக்கு கலெக்டர் விருது வழங்கினார்.தமிழக அரசு, பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு பள்ளியிலும் மேலாண்மை குழு அமைத்துள்ளது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர், மக்கள் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பள்ளியின் தரத்தை உயர்த்துதல், மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கண்காணிப்பது போன்ற பணிகளை செய்கின்றனர். நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாவட்டத்திலேயே பள்ளி மேலாண்மை குழு சிறப்பாக செயல்படுவதாக கலெக்டர் அருண் தம்புராஜ், தலைமையாசிரியர் தேவனாதனை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி