உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காவலர் உடற்தகுதித் தேர்வு நிறைவு: 597 பேர் தேர்ச்சி

காவலர் உடற்தகுதித் தேர்வு நிறைவு: 597 பேர் தேர்ச்சி

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த இரண்டாம் நிலை காவலர் உடற் தகுதித் தேர்வில் 597 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழக காவல் துறையில் 3,359 காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வில் கடலுார் மாவட்டத்தில் 9,160 பேர் எழுதினர். இதில், தேர்ச்சி பெற்ற 926 பேருக்கு உடற்தகுதித் தேர்வு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 6ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது.சான்றிதழ் சரிபார்த்தல், உயரம் மற்றும் மார்பு அளத்தல், 1500 மீ., ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்டவை நடந்தது. உடற்தகுதித் தேர்வில் 690 பேர் பங்கேற்றனர். 236 பேர் ஆப்சென்ட் ஆகினர். உடற் தகுதித் தேர்வில் 597 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !