உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட்டு போட்டியில் வென்ற ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பாராட்டு

விளையாட்டு போட்டியில் வென்ற ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பாராட்டு

விருத்தாசலம் : கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட தனியார் தொழில் பயிற்சி நிலையங்களை சேர்ந்த மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.இதில், வாலிபால் போட்டியில் விருத்தாசலம் ஸ்ரீ விருத்தாம்பிகை தொழிற் பயிற்சி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர்.அதேபோல், 400 மீட்ட தொடர் ஓட்ட பந்தயத்தில் மாணவர்கள் செல்வம், பூவரசு, நேருஜி, வேலன் முதலிடம், 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மாணவர் தமிழரசன் மூன்றாம் இடம் பிடித்தனர்.போட்டியில் வென்ற மாணவர்களுக்கு விழுப்புரம் மண்டல பயிற்சி இணை இயக்குனர் ஜான் போஸ்கோ பரிசு வழங்கி பாராட்டினார்.மேலும், போட்டியில் வென்ற மாணவர்களை ஸ்ரீ விருத்தாம்பிகை தொழிற் பயிற்சி நிலைய தாளாளர் சுந்தரவடிவேல், செயலாளர் அனிதா சுந்தரவடிவேல், இயக்குனர் ரஞ்சித், முதல்வர் கொளஞ்சி ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி