அனைத்துக்கட்சி பிரமுகர்களுடன் விருதையில் ஆலோசனை கூட்டம்
விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்களுடன் சிறப்பு தீவிர திருத்த முகாம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சிறப்பு தீவிர திருத்த முகாம் குறித்து ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ., விஷ்ணு பிரியா தலைமையில் நடந்தது.. தாசில்தார் அரவிந்தன், நேர்முக உதவியாளர் அந்தோணிராஜ், தேர்தல் துணை தா சில்தார் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். தேர்தல் உதவியாளர் சுரேஷ் வரவேற்றார். அதில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, ஓட்டுச்சாவடி நிலை முகவர்களை அனைத்துக்கட்சிகளும் நியமனம் செய்ய வேண்டும். அவர்கள், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுடன் வீடுகள் தோறும் சென்று, வாக்காளர்கள் உள்ளனரா, இடமாற்றமா அல்லது இறந்தனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் எந்தவித பிழையும் இல்லாமல் இருக்க தேசிய, மாநில கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், தி.மு.க., துணை செயலாளர் ராமு, அ.தி.மு.க., நகர தலைவர் தங்கராசு, தே.மு.தி.க., ராஜ்குமார், பா.ஜ., முருகவேல், மா.கம்யூ., குமரவேல், கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.