உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அச்சக உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு

அச்சக உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு

திட்டக்குடி : லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்துக்கட்சி நிர்வாகிகள், அச்சக உரிமையாளர்கள், தங்கும்விடுதி, திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள், அச்சக உரிமையாளர்கள், தங்கும் விடுதி மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. வணிகர் சங்கம் சார்பில், ரூ. 2 லட்சம் வரை எடுத்துச்செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை