உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குட்கா விற்ற தம்பதி கைது

 குட்கா விற்ற தம்பதி கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருணகிரி மற்றும் போலீசார் நேற்று டி.மாவிடந்தல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முகமது நஜீர், 57; மற்றும் அவரது மனைவி பைசுன்பீ, 46; ஆகியோர் தங்களது பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை