உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அடையாள எண் இல்லாவிட்டாலும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு

 அடையாள எண் இல்லாவிட்டாலும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு

நெல்லிக்குப்பம்: தினமலர் செய்தி எதிரொலியாக, அடையாள எண் இல்லாவிட்டாலும், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய,மாநில அரசுகள் பல்வேறு மானியங்களை வழங்கி வருகின்றன. இதில் தவறுகள் நடப்பதை தடுக்க ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த அடையாள எண் நெல்லிக்குப்பம் நகராட்சி போன்ற நகர பகுதியில் நிலம் வைத்துள்ளவர்களால் பெற முடியவில்லை. தற்போது சம்பா பட்டத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வருகின்றனர். நகர பகுதி விவசாயிகளுக்கு அடையாள எண் இல்லாததால் காப்பீடு செய்ய முடியவில்லை என தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து முதல் கட்டமாக வங்கியில் பயிர் கடன் பெற்ற விவசாயிகள் அடையாள எண் இல்லாவிட்டாலும் அந்த வங்கியிலேயே பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். அடையாள எண் இல்லாத கடன் பெறாத விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்