உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஏழு வீடுகள் எரிந்து சேதம் : மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

ஏழு வீடுகள் எரிந்து சேதம் : மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே ஏழு வீடுகள் எரிந்ததில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாயின. நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 32. மனநலம் பாதிக்கப்பட்ட இவர் நேற்று அதிகாலை வெங்கடசாமி என்பவரது கூரை வீட்டுக்குத் தீ வைத்தார். அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் அருகில் இருந்த முஜிபுர் ரஹ்மான், பிச்சையம்மாள், பக்கிரியம்மாள் தட்சணாமூர்த்தி, சின்னராஜ் உட்பட ஏழு பேர் வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இவ்விபத்தில் வீடுகளில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின. நெல்லிக்குப்பம் போலீசார் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ