உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / யோகா போட்டி: ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி சாம்பியன்

யோகா போட்டி: ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி சாம்பியன்

கடலூர் : சென்னையில் நடந்த இந்தோ - ஸ்ரீலங்கா யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் ஏ.ஆர்.எல். எம்., பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். ஸ்ரீநாராயண சேவாஸ்ரமம் மற்றும் மத்திய அரசின் உடல் நலத்துறைக்குட்பட்ட தமிழ்நாடு யோகா கல்சுரல் சொசைட்டியும் இணைந்து நடத்திய மாநில அளவிலான யோகாசனப்போட்டி காஞ்சிபுரத்தில் நடந்தது. இதில் கடலூர் ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று பல பரிசுகளைப் பெற்றனர். ஐந்து முதல் 10 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ஜீவிகா முதல் இடத்தையும், சத்யப்பிரியா மூன்றாம் இடத்தையும், ஆண்கள் பிரிவில் திருநாவுக்கரசு இரண்டாமிடத்தையும், லோகேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 11 முதல் 15 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் சரத் முதலிடத்தையும், நந்தகுமார் இரண்டாமிடத்தையும், பெண்கள் பிரிவில் அஜிதா மூன்றாமிடத்தையும் பெற்றனர். 16 முதல் 20 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் சுதந்திரா முதல் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்கள், யோகா ஆசிரியர் பிரேமாவை, பள்ளித்தாளாளர் தாமோதரன் மற்றும் முதல்வர் ராஜயோககுமார் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி