உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழக அரசின் 100வது நாள்: அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

தமிழக அரசின் 100வது நாள்: அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

கடலூர் : தமிழக அரசு பொறுப்பேற்று 100 நாள் நிறைவடைந்ததை முன்னிட்டு மாவட்டத்தில் பல இடங்களில் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். கடலூர் நகர அ.தி.மு.க., வினர் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி. ஆர்., மற்றும் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம். எல்.ஏ., அய்யப்பன், எம்.ஜி. ஆர்.,மன்ற செயலர் குமார், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, விவசாய அணி காசிநாதன், மீனவரணி தங்கமணி, மருத்துவரணி டாக்டர் சீனுவாச ராஜா, கவுன்சிலர் கந்தன், இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர். வழக்கறிஞர் பிரிவு: கடலூர் செஷன்ஸ் கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர்கள் மாசிலாமணி, ஜெகன்நாதன், செந்தில்குமார், நந்தகுமார், அழகுசாமிகண்ணு கலந்து கொண்டனர். விருத்தாசலம்: நகர செயலர் கலைச்செல்வன் தலைமையில் தொகுதி செயலர் அரங்கநாதன், நிர்வாகிகள் வேங்கடவேணு, நடராஜன், பேரவை நகர செயலர் சந்திரகுமார், சோழன் சம்சுதின் உள்ளிட்டோர் பாலக்கரை மற்றும் கடைவீதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பண்ருட்டி: பேரவை முன்னாள் மாவட்ட செயலர் பன்னீர்செல்வம், நகர தலைவர் ராஜதுரை, பேரவை நகர செயலர் செல்வம், தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் தாஜீதீன் உள்ளிட்டோர் பண்ருட்டியிலும், எல்.என்.புரத்தில் ஒன்றிய தலைவர் பெருமாள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நெல்லிக்குப்பம்: அண்ணாதுரை சிலைக்கு நகர செயலர் சவுந்தர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். காசிநாதன், வேலாயுதம், குமார், சேகர், ரங்கராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். திட்டக்குடி: திட்டக்குடி பஸ் நிலையத்தில் நகர செயலர் நீதிமன்னன் தலைமையில் அ.தி.மு.க., வினர் இனிப்புகள் வழங்கினர். சேத்தியாத்தோப்பு: நகர செயலர் இளஞ்செழியன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் ஜெயராமன், நிர்வாகிகள் நன்மாறன், ஸ்ரீதர், முருகன், கோவிந்தசாமி, ஜபருல்லா, ராஜகுரு, ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி