உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு தேர்வில் தமிழில் அதிக மதிப்பெண்கள் மாணவிகளுக்கு சிரில் அறக்கட்டளை பரிசு

அரசு தேர்வில் தமிழில் அதிக மதிப்பெண்கள் மாணவிகளுக்கு சிரில் அறக்கட்டளை பரிசு

கடலூர் : பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் நடந்த விழாவில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.சிரில் நினைவு அறக்கட்டளை, தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனம், மாவட்ட சங்கம் சார்பில் 12வது ஆண்டு தமிழ் விழா கடலூர் பி.எஸ்.என்.எல்., ஒருங்கிணைந்த சேவை வளாகத்தில் நடந்தது.எழுத்தாளர் ராமச்சந்திரன் (எஸ்ஸார்சி) தலைமை தாங்கினார். சிரில் அறக்கட்டளை செயலர் லோகநாதன் வரவேற்றார். கடலூர் பி.எஸ். என்.எல்., முதுநிலை பொது மேலாளர் மார்ஷல் ஆண்டனி லியோ, பிளஸ் 2 தமிழ் பாடத்தில் 200க்கு 185 மதிப்பெண் எடுத்த மாணவி காயத்திரி, 184 மதிப்பெண் பெற்ற மாணவி சுஜீதா, பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் 100க்கு 98 மதிப்பெண் பெற்ற சத்தியவதனா, 97 மதிப்பெண் பெற்ற நித்தியா, விஷ்ணுபிரியா ஆகியோருக்கு பரிசு வழங்கி பேசினார்.புதுச்சேரி மாவட்ட நீதிபதி ராமபத்திரன் 'வல்லமை தாராயோ' என்ற தலைப்பில் பேசினார். மாவட்டச் செயலர் சுந்தரமூர்த்தி, சிரில் அறக்கட்டளை லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். சுப்ரமணியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை