உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி உட்கோட்டத்தில் எஸ்.பி., பகலவன் குறைகேட்பு

பண்ருட்டி உட்கோட்டத்தில் எஸ்.பி., பகலவன் குறைகேட்பு

பண்ருட்டி : பண்ருட்டி உட்கோட்ட போலீசாரின் குறைகளை எஸ்.பி., பகலவன் நேற்று கேட்டறிந்தார்.பண்ருட்டி உட்கோட்ட போலீசாரின் மாதாந்திர கவாத்து பயிற்சி நேற்று காலை மகளிர் போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்தது. இதில் எஸ்.பி., பகலவன் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, நடுவீரப்பட்டு போலீஸ் அதிகாரிகள், காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின் போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார். இதில் டி.எஸ்.பி., மணி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரமுருகேசன், ராமமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தபாபு, சந்திரபாபு, குணசேகரன், சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை