உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செயற்கை நகை தயாரிக்கும் பயிற்சி கடலூரில் இன்று முதல் துவக்கம்

செயற்கை நகை தயாரிக்கும் பயிற்சி கடலூரில் இன்று முதல் துவக்கம்

கடலூர் : செயற்கை நகைகள் தயாரிக்கும் நான்கு நாள் பயிற்சி கடலூரில் இன்று (14ம் தேதி) முதல் துவங்குகிறது.மத்திய அரசின் அமைப்பு மூலம் கடலூர் மஞ்சக்குப்பம், தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயூர்வேதிக் மருத்துவமனையில் செயற்கை நகைகள் தயாரிக்கும் நான்கு நாள் பயிற்சி 14, 15, 20, 21 தேதிகளில் நடக்கிறது. இதில் நெக்லஸ், ஜிமிக்கி, கம்மல், வளையல், கொலுசு உட்பட 50க்கும் மேற்பட்ட பேன்ஸி நகைகள் தயரிக்கும் பயிற்சி செயல் முறை விளக்கத்துடன் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முன்பதிவு மற்றும் பயிற்சி கட்டணம் விவரங்களுக்கு 98422-43055 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்.இத்தகவலை தி சுசான்லி குரூப் மேலாளர் அக்குபஞ்சர் டாக்டர் ரவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி