உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உள்ளாட்சித் தேர்தல்அனைத்து கட்சி கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல்அனைத்து கட்சி கூட்டம்

கடலூர்:உள்ளாட்சித் தேர்தல் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது.உள்ளாட்சித் தேர்தல் 2011 தொடர்பாக அமைக்கப்படவுள்ள ஓட்டுச்சாவடிகளின் வரைவு பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படவுள்ள இடங்களில் வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும், இப்பட்டியலை பார்வையிட்டு ஆட்சேபணை இருப்பின் உடன் தெரிவிக்குமாறு கலெக்டர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி