உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இளம்பெண் கடத்தல்6 பேர் மீது வழக்குப்பதிவு

இளம்பெண் கடத்தல்6 பேர் மீது வழக்குப்பதிவு

பண்ருட்டி:பண்ருட்டி அருகே மகள் கடத்தப்பட்டதாக தந்தை காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.பண்ருட்டி அடுத்த திருவாமூர் சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் ரமேஷ்,39; இவரது மகள் பத்மா,17; இவர் சேமக்கோட்டை ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி வீட்டில் இருந்த பத்மாவை காணவில்லை.இது குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் திருவாமூர் காலனியை சேர்ந்த ராஜேஷ், பகத்சிங், பாஸ்கர், கணேஷ், சிம்பு, தனுஷ்கோடி ஆகியோர் பத்மாவை கடத்தியது தெரியவந்தது. அதன் பேரில் ராஜேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கடத்தல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ