உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாய்வீட்டு சீதனம் வழங்கியுள்ளார் முதல்வர்

தாய்வீட்டு சீதனம் வழங்கியுள்ளார் முதல்வர்

கடலூர் : ''மிக்சி, கிரைண்டர், மின் விசிறி மற்றும் கறவை மாடுகள் அனைத்தும் தாய் வீட்டு சீதனமாகும்'' என அமைச்சர் சம்பத் பேசினார்.கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம்நேற்று நடந்தது. கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் குருபாக்கியம், சி.இ.ஓ., அமுதவல்லி வரவேற்றனர். முதல் கட்டமாக நாகப்பனூர் மற்றும் நடுக்குப்பத்தில் 211 குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறியும், அழகியநத்தத்தில் 50 குடும்பங்களுக்கு கறவை மாடுகளும், கடலூர் சேவையில்லத்தில் 50 மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்புகளும் வழங்கப்பட்டது. ÷மூக நலத்துறை அமைச்÷ர் ö÷ல்வி ராமஜெயம் சிறப்புரையாற்றினார்.கொட்டும் மழையில் திட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் சம்பத்பேசியதாவது:அரசு ÷õர்பில் வழங்கும் ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற இப்பொருட்கள் உங்களுக்கு தாய் வீட்டு சீதனமாகும். கறவை மாடுகள் ஒவ்வொன்றின் விலை 30 ஆயிரம் ரூபாயாகும். இத்திட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் பயன்பெற வேண்டும், கிராம பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற தொலைநோக்கில் முதல்வர் ஜெயலலிதா திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் முன்னோடியாக உள்ள குஜராத்திலும் இல்லை. மாவட்டத்தில் இந்த ஆண்டு 87 ஆயிரம் குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளும், 28 ஆயிரத்து 381 மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் தலா 900 குடும்பங்களுக்கு கறவை மாடுகள், மற்றும் ஆடுகளும் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை