உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., மேல்நிலைப்பள்ளியில்மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி

என்.எல்.சி., மேல்நிலைப்பள்ளியில்மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி

கடலூர்:நெய்வேலி, மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.தலைமை ஆசிரியர் துரைசாமி பயிற்சியை துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சீதாராமன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் அமிழ்தா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரான மாற்றுமுறை மருத்துவ சிகிச்சை நிபுணர் தமிழழகன் யோகா பயிற்சி அளித்தார்.முகாம் ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் அசோகன், என்.எல்.சி., பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் ஜூனியர் ரெட்கிராஸ் உதவி ஆலோசகர் மேனகாவல்லி மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர். முகாமில் 200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.ஆலோசகர் செண்பகவல்லி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை