மகள் மாயம்: தாய் புகார்
பண்ருட்டி: மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். பண்ருட்டி அடுத்த பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி மகள் கார்த்திகா,21; பி.இ., பொறியியல் 3 ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவரை திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பரிமளா அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து கார்த்திகாவை தேடி வருகின்றனர்.