உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் அள்ளிய லாரி சிறை பிடிப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் விடுவிப்பு

மணல் அள்ளிய லாரி சிறை பிடிப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் விடுவிப்பு

பண்ருட்டி : பண்ருட்டி அருகே மணல் குவாரியில் இருந்து மணல் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறை பிடித்தனர். பண்ருட்டி அடுத்த பெரியஎலந்தம்பட்டு ஊராட்சி கெடிலம் ஆற்றங்கரையில் கடந்த மாதம் முதல் மணல் குவாரி இயங்கி வருகிறது. குவாரியில் இருந்து மணல் சலிக்கப்பட்டு சென்னை மெட்ரோ பிரிவிற்கு அனுப்பப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் குவாரியில் இருந்து சலிக்கப்பட்ட மணலுடன் லாரி ஒன்று எலந்தம்பட்டு காலனி வழியாக வந்தது. அப்போது காலனி பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதனால் மணல் குவாரியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி லாரியை சிறை பிடித்தனர். தகவலறிந்த காடாம்புலியூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் பூபாலச்சந்திரன், வி.ஏ.ஒ., குணசேகர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்குப் பின் நள்ளிரவு ஒரு மணியளவில் லாரியில் இருந்த மணலை மீண்டும் ஆற்றில் கொட்டி விட்டு லாரியை மட்டும் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை