உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம்

இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம்

பண்ருட்டி : பண்ருட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் திருவதிகையில் நடந்தது. மாவட்டத் தலைவர் கிருஷ்ண கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலர் தங்கவேல், குமார் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் முருகானந்தம் சிறப்புரையாற்றினார். நகர தலைவர் சுகுமார், ஒன்றிய தலைவர் ராமசாமி, நகர செயலர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் வரும் 1ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து 2ம் தேதி மாலை 4 மணிக்கு இந்து சமுதாய ஆன்மிக பேரவை சார்பில் மகா கணபதி யாகமும், மிருதிஞ்சிய யாகம் நடத்துவது. 3ம் தேதி ரங்கராஜன் தலைமையில் நகர, ஒன்றியங்களில் 70க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் டைவர்ஷன் ரோடு, மணிலா கமிட்டி அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடலூர் சில்வர் பீச்சில் வைத்து பூஜை செய்து விஜர்சன விழா நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி