உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே பயன்தரும்: எஸ்.பி., ராஜாராம்

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே பயன்தரும்: எஸ்.பி., ராஜாராம்

நெல்லிக்குப்பம்: ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே பயன்தரும் என, எஸ்.பி., ராஜாராம் அறிவுரை வழங்கினார்.நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. நகராட்சி சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் கிரிஜா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை வசந்தி வரவேற்றார். எஸ்.பி., ராஜாராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், கல்வி மட்டுமே முன்னேற்றம் தரும். நான் உங்கள் முன் நிற்பதற்கு நான் கற்ற கல்வியே காரணம். பெண் கல்வி அவசியம். கல்வியே தன்னம்பிக்கையை தரும்.ஒழுக்கமில்லாத கல்வி பயன்தராது, படித்தவர்களுக்கு கிடைக்கும் மரியாதை யாருக்கும் கிடைக்காது. தாயும், தந்தையுமாக போற்ற வேண்டியவர்கள் ஆசிரியர்கள். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே பயன்தரும் என, பேசினார்.விழாவில் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன், வழக்கறிஞர் உதயகுமார், வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி, கவுன்சிலர்கள் ஸ்ரீதர், பூபாலன், பாரூக்உசேன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதிகள் வேலு, கதிரேசன், இளைஞரணி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை