| ADDED : டிச 25, 2025 06:13 AM
விருத்தாசலம்:விருத்தாசலம் வயலுாரில் 'என் ஓட்டுச்சாவடி வெற்றி ஓட்டுச்சாவடி' பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. நகர தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் செங்குட்டுவன், துணை செயலாளர்கள் ராமு, சந்தானலட்சுமி சுந்தரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி பழனிச்சாமி பொருளாளர் மணிகண்டன் வழக்கறிஞர்கள் அருள்குமார், ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் முத்துக்குமார், தீபா மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இதில், நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஓட்டுச்சாவடி முகவர்கள், நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அதன்பின், வீடு வீடாக சென்று, தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இதில் தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.