| ADDED : நவ 19, 2025 06:04 AM
சிதம்பரம் சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் (எஸ்.ஐ.ஆர்.,) தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு ஆரம்பத்தில் இருந்தே தி.மு.க.,எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடத்தியது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி முடிந்து, சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில், இண்டி கூட்டணி கட்சிகள் படுதோல்வியடைந்தது. தமிழகத்தில், சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடந்துவருகிறது. சிதம்பரம் சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடந்து வருகிறது. இப்பணியில் தி.மு.க., நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். பூத் ஏஜெண்ட் மற்றும் டிஜிட்டல் ஏஜெண்டுகள் வீடு, வீடாக சென்று ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் வழங்கியுள்ள விண்ணப்பத்தை எப்படி பூர்த்தி செய்வது குறித்து அனைத்துபொதுமக்களுக்கும் விழிப்புணர்பு ஏற்படுத்தி மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர். மேலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளில் மனுக்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ள விவரங்களை தி.மு.க., மாவட்ட கழக தலைமைக்கு வாட்ஸ் ஆப் மூலம் தினமும் அப்டேட் செய்து வருகின்றனர்.