உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க.,வினர் மரியாதை

அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க.,வினர் மரியாதை

விருத்தாசலம் : அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி, விருத்தாசலம் கடலுார் சாலையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க., வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில வழக்கறிஞர் அணி இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு, துணை செயலாளர் நம்பிராஜன்,இளைஞரணி அமைப்பாளர் பொன் கணேஷ், பொருளாளர் மணிகண்டன், வழக்கறிஞர்கள் அருள்குமார், ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி