உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தேர்தல் பணிகள் கலெக்டர் ஆய்வு

 தேர்தல் பணிகள் கலெக்டர் ஆய்வு

நெய்வேலி: நெய்வேலியில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடந்தது. நெய்வேலி டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணியினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 4 ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளாக 2, 313 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெற்று அதனை தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அலுவலர்கள் பெறப்பட்ட படிவங்களை அவர்களே நேரடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியினை எளிதாக செய்யும் வகையில் கூடுதலாக ஊரக வளர்ச்சித் துறை, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் அலுவலர்களின் பணி எளிதாக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் படிவத்தினை பூர்த்தி செய்திடும் போது அவர்களுக்கு எழும் ஐயங்களை உடனிருந்து சரியாக பூர்த்தி செய்திட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை