உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எம்.ஆர்.கே., கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

எம்.ஆர்.கே., கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 24 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் எச்.எல் மேண்டோ ஆனந்த் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளர் ஹரிஷ், மாணவர்களிடம் நேர்காணலை நடத்தினார். இதில் மெக்கானிக்கல் மற்றும் இ.சி.இ., துறை 28 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி சேர்மன் கதிரவன் வாழ்த்து தெரிவித்தார்.கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ