| ADDED : மார் 06, 2024 03:00 AM
கடலுார் : சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் சரியாக அளந்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென, வியாபாரிகள் மனு அளித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமையில், சேத்தியாத்தோப்பு அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அளித்த மனு:சேத்தியாத்தோப்பு பேரூராட்சி கடைவீதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 43 கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கு பல ஆண்டுகளாக வீட்டு வரி, தொழில் வரி செலுத்தி தொழில் செய்து வருகிறோம். இப்பகுதியை சரியாக அளக்காமல் நெடுஞ்சாலைத்துறையின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக நெடுஞ்சாலைத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வியாபார தொழிலை நம்பியுள்ள எங்களின் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இப்பகுதியை முறையாக அளந்து ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.