உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.முட்லுார் கல்லுாரியில் களப்பயண நிகழ்ச்சி

சி.முட்லுார் கல்லுாரியில் களப்பயண நிகழ்ச்சி

கிள்ளை : சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி ஆர்வமூட்டலுக்கான கல்லுாரி களப்பயண நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார். ஆங்கில துறை தலைவர் லோகராஜன் வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பூங்கோதை பங்கேற்று பேசினார்.நிகழ்ச்சியில், துறை தலைவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஏற் பாடுகளை, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் மணிவர்மன், பிரபா, கோவிந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.ஜானகிராம் நன்றி, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை