உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மனைப்பட்டா வழங்க கோரி மீனவர்கள் திடீர் போராட்டம்

 மனைப்பட்டா வழங்க கோரி மீனவர்கள் திடீர் போராட்டம்

கடலுார்: கடலுாரில் சுனாமி குடியிருப்பு மக்களுக்கு மனைப்பட்டா வழங்காததை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர். கடலுார், தேவனாம்பட்டினம் சுனாமி நினைவு துாணில் மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தின் நிறுவனர் ஏகாம்பரம் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அப்போது, தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பு மக்களுக்கு மனைப்பட்டா வழங்க பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த வி.ஏ.ஓ., அனுராதா மற்றும் தேவனாம்பட்டினம் போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். வரும் 10ம் தேதிக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில், போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை