உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முகத்துவாரம் ஆழப்படுத்தக்கோரி மீனவர்கள் மறியல்

முகத்துவாரம் ஆழப்படுத்தக்கோரி மீனவர்கள் மறியல்

கிள்ளை,: கிள்ளை சின்னவாய்க்கால் முகத்துவாரத்தை ஆழப்படுத்தித்தரக்கோரி, 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிதம்பரம் அருகே கிள்ளை கடற்கரையோர கிராமங்களான கிள்ளை, சின்னவாய்க்கால், பில்லுமேடு, பட்டரையடி, எம்.ஜி.ஆர்., நகர், தளபதி நகர், சிசில் நகர், கலைஞர் நகர் ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் படகில் சின்னவாய்க்கால் முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.இந்நிலையில் முகத்துவாரம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு துார்ந்துவிட்டது. இதனால், வெள்ளாற்று முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். வெள்ளாற்று முகத்துவாரத்தில் சமீபத்தில் நடந்த படகு விபத்தில் ஒரு வாரத்தில் மட்டும் மூன்று மீனவர்கள் இறந்துள்ளனர். அப்போது, முகத்துவாரத்தை இரண்டு நாட்களில் ஆழப்படுத்தி தருவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.ஆனால், முகத்துவாரம் ஆழப்படுத்தாததால் நேற்று மதியம் 12;30 மணிக்கு கிள்ளை, சின்னவாய்க்கால் உட்பட 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், கிள்ளையில் இருந்து பிச்சாவரம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி மற்றும் கிள்ளை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மீன் வளத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுயளித்ததால் மதியம் 1;30 மணிக்கு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி